BREAKING NEWS

Trending

News

Entertainment

EEtv


கனடாவின் மொன்ரியல் வீதிகளில் ஆர்பாட்டத்தில் இறங்கிய பெண்கள்


image-11
கனடாவின் மொன்ரியல் வீதிகளில் ஆர்பாட்டத்தில் இறங்கிய பெண்கள்
தமது பிராந்தியத்தில் வசிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது எமிலி கேம்லின் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி நொட்ரே டாம் பசிலிக்கா வரை சென்றடைந்தது. இதன் போது ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்த குழுவின் தலைவர் எலன் கேப்ரியல் அங்கு உரையாற்றினார்.
இதில், பெண்களை பாதுகாப்பதற்கான வளப்பற்றாக்குறை மத்திய அரசிடம் காணப்படுகின்றமை குறித்தும், காணாமல் போன பெண்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான போதிய பயிற்சிகளை பொலிஸாருக்கு வழங்குவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், அரச நடவடிக்கைகள் சார்ந்தும், கல்விச் செயற்பாடுகள் சார்ந்தும் பல ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டி அவர், எதிர்வரும் காலங்களில் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையில் காலம் தாழ்த்துவது தவறானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறான போதும் கடந்த மாதம், கனடா அரசாங்கம் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பெண்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கும் என்று வாக்குறுதி அளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கனடிய மண்ணில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு “எழுக தமிழ்”


நேற்று அக்டோபர் 1, 2016 அன்று கனடிய மண்ணில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு கனடா வாழ் தமிழ் மக்கள் “எழுக தமிழ்” நிகழ்வில் பங்கேற்றார்கள்.
தாயகத்தில் 2009 இன் பின்பு மாபெரும் மக்கள் எழுச்சியை அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழீழ மக்கள் வரலாறாக்கி “எழுக தமிழ்” என்ற வரலாற்று சிறப்பு மிக்க எழுச்சியை நிகழ்த்தி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த நிலையில் இப்பொழுது கனடாவில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் ஒரு எழுச்சியை தாயக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் 2020 சர்வசன வாக்கெடுப்புக்கு வலுச்சேர்க்கவும் நிகழ்த்தி காட்டி உள்ளார்கள்.
“எழுக தமிழ்” நிகழ்வில் மற்றுமொரு சிறப்பாக 2009 க்கு முன்பு தமிழீழ தேசியத்துக்காக ஓரணியில் நின்ற உறவுகள் பின்னாளில் பல்வேறு அமைப்புகளாக பிரிந்திருந்தாலும் இந்நிகழ்வில் அத்தகைய அமைப்பு பேதங்கள் இன்றி பல்வேறு அமைப்புகளில் இருந்தும் தமிழ் உறவுகள் வருகை தந்திருந்தமை மகிழ்ச்சியை தந்தது.
குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசு, கனடிய தமிழர் தேசிய அவை என பிரிந்திருந்த உறவுகள் ஒரே மேடையில் ஒரே அணியில் அணி திரண்டு எழுச்சி முழக்கம் இட்ட காட்சி எங்கள் தமிழினத்தின் பெருமையை பறை சாற்றிற்று.
மக்கள் மக்களுக்காக போராட நினைத்தால் பிரிவினைகள் கடந்தும் அணி திரள்வார்கள் என்ற உண்மையை எழுச்சியோடு நிரூபித்திருக்கிறார்கள்.
ஒரு மழையும் குளிருமான ஒரு விடுமுறை நாளில் எம் உறவுகள் இத்துணை பெரும் திரளாக அணி திரண்டமை மாபெரும் எழுச்சியாக திகழ்ந்தது.
சங்கநாதம் எழுப்பி “எழுக தமிழ் படை விரட்ட” “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்” அரசியல் கைதிகளை விடுதலை செய்” ” எமது மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு” என்பன போன்ற முழக்கங்களோடு எழுச்சி பாடல்களும் இசைக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.
கனடிய மண்ணின் அரசியல் பிரமுகர்கள், ஊர்சங்க, விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த இயக்குனரும் தமிழின உணர்வாளருமான தோழர் கௌதமன் அவர்களும் எழுச்சி உரையாற்றி இருந்தார்.
வருகை தந்த அரசியல் பிரமுகர்கள் தமிழினத்தின் எழுச்சிக்கு பாராட்டும் வாழ்த்தும் பகிர்ந்து எப்பொழுதும் போல் தமிழினத்தின் உணர்வுகளோடு தாமும் தோளோடு தோள் கொடுப்போம் என உறுதி கூறினார்கள்….
கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழீழ தேசிய கொடியோடு அரங்கேறி எழுச்சி கவிதைகள், எழுச்சி உரைகளை ஆற்றினார்கள்.
நிமிர்வோடு தமிழீழ தாயகத்தின் வரை படம் வைக்கப்பட்டதோடு திரும்பிய திசை எங்கும் சிவப்பு மஞ்சள் வண்ணக் கொடிகள் பறந்தன.
குளிர் காற்று வீசிய போதும் மழை கொட்டிய பொழுதும் குண்டு மழை நடுவே எம் உறவுகள் பட்ட வலிகளை விடவா இந்த காலநிலை எம்மை வருத்தப் போகின்றது என உணர்வோடு குடை பிடித்து நிகழ்வின் இறுதியில் பிரகடனம் வாசிக்கப்பட்டு உறுதி மொழி எடுக்கும் வரையில் இருந்தார்கள்.
தமிழ் மக்களின் போராட்டம் அடைக்கப்பட்டு விட்டது உலகப் பரப்பெங்கும் என்றிருந்த காட்சிகள் மாறி உலக தமிழினம் ஓரணியில் பேரணியாக திரண்டு நின்றது.
எழுகை கொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். எங்கள் தமிழினம் இனி அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து எழுகின்ற காலம்..
மங்கு தமிழ் இங்கு பொங்கு தமிழாய் இனி எழும் என்பதை கனடாவில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வும் உறுதி கூறியுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/70932.html#sthash.T21Frk9E.dpuf

கனடிய பள்ளியை கதி கலங்க வைத்த இவர்

கனடிய பள்ளியை கதி கலங்க வைத்த இவர்

கனடா நாட்டில் உள்ள ஹாலிபக்ஸ் நகரில் கோமாளி வேடமணிந்த நபர் ஒருவர் அங்குள்ள பள்ளிகூடம் அருகில் சுற்றி திரிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
canada-school

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த சம்பவம் பற்றி ஒருவர் கூறுகையில், கனடாவில் உள்ள ஹாலிபக்ஸ் நகரில் மேல்நிலைபள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஒரு மனிதர் தனது முகத்தில் கலர் சாயத்தால் கோமாளி போன்று படம் வரைந்து கொண்டு, அங்கு சந்தேகப்படும் படி நடமாடி வந்திருக்கிறார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவர்கள் வந்த போது அந்த நபரை காணவில்லை என்றும் ஆனாலும் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை எனவும் கூறினார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வட அமெரிக்காவிலும் இது போல கோமாளி வேடமணிந்த மனிதர்கள் அலைவது போன்ற காட்சிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க கோரி தந்தை மனு தாக்கல்!


புழல் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தன்னிடம் அளிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் திடீரென சென்ற மாதம் 18ம் திகதி மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்துக் கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.




 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates