ஜோர்ஜியா நாட்டில் தொலைக்காட்சி நேரலை விவாதத்தின்போது அரசியல் கட்சி தலைவர்கள் இருவர் அடிதடியில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்ஜியா நாட்டில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என அங்குள்ள அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
ஆங்காங்கே காரசாரமான விவாதங்களும் கைகலப்புகலும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சி விவாதத்தின் நேரலையின்போது சீர்திருத்தவாதிகள் கட்சியை சேர்ந்த இராக்லி கிளோந்தி மற்றும் தொழில்துறை கட்சியை சேர்ந்த சாஸா அக்லாட் ஆலிய இரண்டு ஜோர்ஜியா அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் ஆவேசமாக தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரது வார்த்தைகளும் கோபத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி கைகலப்பிலும் இறங்கியுள்ளனர்.
விவாதத்தை நடத்திய நடுவர் பல முறை இவார்கள் இருவரையும் கண்டித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை.
இதனிடையே திடீரென்று ஒருவர் தனக்கு முன்பிருந்த தண்ணீரை எடுத்து இன்னொருவரின் முகத்தில் வீசினார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கோபத்தில் இருக்கையை விட்டு எழுந்து வந்து தாக்கினார்.
இந்த சம்பவம் நேரலையில் சில நிமிடங்கள் வரை நீடித்தது.
தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடியில் இறங்கிய அரசியல் கட்சியினர்!
Posted by Tami on 20:12:00 in LOCAL NEWS NEWS | Comments : 0