BREAKING NEWS

ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் : கருணாநிதி வேண்டுகோள்


சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி, "முதல்வரின் உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?" என கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மருத்துவ மனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ மருத்துவ மனை தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

அதே நேரத்தில் முதலமைச்சர் மருத்துவ மனையில் இருந்தவாறே காவிரி பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், டில்லியில் அவர் ஆற்ற வேண்டிய உரையினை அவரே “டிக்டேட்” செய்ததாகவும் செய்தி வருகிறது. ஆனால் சாதாரண சந்திப்பையும், அதிகாரிகளுடனான கூட்டத்தையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், முதலமைச்சர் மருத்துவ மனையிலேயே ஆலோசனை நடத்திய புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை.

மருத்துவ மனையிலே அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய கட்சி தொண்டர்கள் பரிதவிப்பிலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள். அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவ மனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன் வரவில்லை.

ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. ஏன், அ.தி.மு.க. வின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட அவரைக் கண்டு பேசியதாக செய்தி வரவில்லை. இதனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டிடும் வகையிலாவது தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து தக்க ஆதாரங்களோடு செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Keywords: jayalalitha died, LOCAL NEWS, tamilgun, tamilgun news, jayalalitha health, jayalalitha health 2016, jayalalitha health conditions, jayalalitha health conditions 2016, jayalalitha health insurance,jayalalitha health latest news,jayalalitha health problems 2016

Share this:

 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates