NEWS ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிப்பு.
Posted by
Tami
on
05:41:00
in
Canada Tamil News
tamil gun
tamilgun
tamilgun news
|
ரொறொன்ரோ-ஒன்ராறியோ குறைந்த பட்ச ஊதியம் சனிக்கிழமை மணித்தியாலத்திற்கு டொலர்கள் 11.40ஆக அதிகரிக்கின்றது.
டொலர்கள் 11.25-லிருந்த அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த அதிகரிப்பு மூன்றாவது தொடர்ச்சியான வருடாந்த அதிகரிப்பாகும். மதுபான சர்வர்களிற்கான குறைந்த பட்ச அதிகரிப்பு டொலர்கள் 9.80லிருந்து 9.90டொலர்களாக அதிகரிக்கின்றது.
பொதுவான குறைந்த பட்ச சம்பளத்தை 15டொலர்களாக அதிகரிக்குமாறு புதிய ஜனநாயக வாதிகள் மாகாண லிபரல் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்சமயம் ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதியம் கனடாவின் மிகப்பெரியதொரு அளவென தெரிவித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கெவின் விளின் இரண்டு வருடங்களில் இது குறித்து மறு ஆய்வு செய்யும் என கூறினார்.
2018ல் குறைந்த பட்ச ஊதியத்தை டொலர்கள் 15 ஆக உயர்த்தும் என அல்பேர்ட்டா என்டிபி அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ளது.