பிரான்சில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் Rebeka Masarova மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rebeka Masarova வெளியிட்டுள்ள பதிவில், கடந்த செப்டம்பர் 26ம் திகதி Clermont Ferrand நடக்கும் போட்டியில் பங்கேற்க அம்மா, சகோதரானுடன் காரில் பயணம் மேற்கொண்டோம்.
சேரும் இடத்திற்கு 100 கி.மீ முன்னால் நாங்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை, அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினோம்.
திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு வெளியே ஓடத் தொடங்கியது. பின்னர், மூன்று நான்கு முறை உருண்டு ஓர் இடத்தில் நின்றது, நடந்தது அனைத்தும் எனக்கு நினைவு இருக்கிறது.
இந்த விபத்து ஒரு படம் போல் இருந்தது, எங்கள் உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நான் எப்போதும் நன்றி தெரிவிப்பேன் என Rebeka Masarova குறிப்பிட்டுள்ளார்.