சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முன்னிலை வகித்து வரும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக பொருளாதார மையம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போட்டித்திறன் குறியீடு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு, பேரியல் பொருளாதார சூழ்நிலை, சுகாதாரம், ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி மற்றும் பயிற்சி, சரக்கு சந்தை திறன், நிதிச் சந்தை வளர்ச்சி, சந்தை மதிப்பு மற்றும் கண்டுபிடிப்பு உள்ளிட்ட 12 காரணிகளை மையப்படுத்தி இவற்றில் எந்த நாடு சிறைந்ததாக விளங்குகிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
2016-2017ம் ஆண்டுக்குரிய ஆய்வை 138 நாடுகளில் மேற்கொண்டு அதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளது.
சர்வதேச போட்டித்திறன் குறியீடு அறிக்கையில் முதல் 10 இடங்களை பிடித்து நாடுகளின் பட்டியல்:
- சுவிட்சர்லாந்து
- சிங்கப்பூர்
- அமெரிக்கா
- நெதர்லாந்து
- ஜேர்மனி
- சுவீடன்
- பிரித்தானியா
- ஜப்பான்
- ஹோங்கோங்
- பின்லாந்து
இதே பட்டியலில் கனடா - 15, பிரான்ஸ் - 21, அவுஸ்ரேலியா - 22, இந்தியா - 39, இலங்கை - 71 ஆகிய இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.