அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் நேரடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வாஷிங்டன் நகரில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பரிமாரிக்கொண்டனர்.
எனினும், நிகழ்ச்சியின் இறுதியில் ஹிலாரி கிளிண்டன் அளித்த பதில்கள் அரங்கத்தை அதிர வைத்துள்ளது.
’ஜனாதிபதி பதவிக்கு ஹிலாரி தகுதி இல்லாதவர் என எப்படி கூறுகிறீர்கள்?’ என டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் ‘ஹிலாரிக்கு அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு தேவையான தோற்றங்களும் திறமையும் இல்லை.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோதும் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. ஒரு அமைச்சர் பதவியை சரியாக நிர்வகிக்க தெரியாதவர் எப்படி ஜனாதிபதி ஆக முடியும்?’ என டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் பதிலால் சற்று குரலை உயர்த்தி பேசிய ஹிலாரி, ‘ஜனாதிபதி பதவி வகிக்க எனக்கு திறமை இல்லை எனக் கூறுகிறாரா? அவரை என்னிடம் திறமையை பற்றி பேச சொல்லுங்கள்.
பெண்களை மதிக்காமல் அவர்களை பன்றிகள், நாய்கள் என விமர்சிக்கும் டொனால்ட் டிரம்ப் எப்படி ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவராக இருக்க முடியும்?
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் டிரம்ப் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரி போன்றவர். இவர் எப்படி அணு ஆயுதங்களை திறமையாக கையாள்வார்? என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கலந்துக்கொண்ட இந்த விவாத நிகழ்ச்சி உலக முழுவதிலும் இருந்து சுமார் 100 மில்லியம் மக்களுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.