BREAKING NEWS

Sadhuram 2 Movie Review

தமிழ் சினிமா மெல்ல அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. இதை நிரூபிக்கும் பொருட்டு பல படங்கள் திரைக்கு வருகிறது. இதில் பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களே ரசிகர்களை வெகுவாக கவர்கின்றது. மாயா, காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் அனைவரின் கவனம் ஈர்த்தது. அந்த வரிசையில் இன்று உலகம் முழுவதும் வந்துள்ள படம் தான் சதுரம்-2.

கதைக்களம்

ஹாலிவுட்டில் சைக்கோ த்ரில்லர் வகை கதையின் மன்னன் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட ஹிட் அடித்த சீரியஸ் தான் SAW. இந்த படத்தை அப்படியே காப்பியடித்து இவர்கள் பெயரை போடாமல், ஆரம்பத்திலேயே SAW படத்தின் இன்ஸ்ப்ரிஷேன் என சொல்லியே ஆரம்பிக்கின்றனர்.
ஓர் சிறிய அறை, இதில் மாட்டிக்கொள்ளும் இருவர், மரணத்தை தவிர மற்ற அனைத்து கொடுமைகளையும் அனுபவிக்க, யார் இவர்களை இப்படி செய்வது, எதற்காக செய்கிறார், இவர்கள் இதிலிருந்து மீண்டார்களா? என்பதே படத்தின் ஒன் லைன் கதை.

படத்தை பற்றிய அலசல்

கிட்டத்தட்ட 80% அப்படியே SAW படத்தின் தழுவல், நம்மூர் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றியுள்ளனர், Yog Japee பில்லா படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான ரோல், இவரை இதுப்போல் நல்ல கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தினால் நல்ல இடம் காத்திருக்கின்றது.
முதல் படமே இப்படி ஒரு முயற்சி கண்டிப்பாக பாராட்டிய ஆகவேண்டும், சுமந்த் ராதகிருஷ்ணன், மிகவும் நேர்மையாக கூறியே இப்படத்தை இயக்கியுள்ளார், அதற்கே தனியாக ஒரு பாராட்டு.
படத்தில் மிகவும் குறைந்த கதாபாத்திரம் தான் வருகிறது, இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் சலிப்புத்தட்டவில்லை, கடைசிவரை Bore அடிக்காமல் கொண்டு சென்றுள்ளனர்.
நம்ம ஊர் சென்ஸாரை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படத்தை எடுப்பதே பெரிய விஷயம் தான், ஆனால், பிரச்சனையே இங்கு தான், SAW என்றாலே கொடுரூரமாக கொலை செய்வது பார்க்க பயம் வந்தாலும் எல்லோரும் ரசித்து தான் பார்த்தார்கள்.
அந்த பரபரப்பும், பயமும் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங், முன்பே சொன்னது போல் இதற்கு நம்ம ஊரின் சென்ஸார் விதிகளே காரணம்.

க்ளாப்ஸ்

படத்தின் இசை, ஒளிப்பதிவு குறிப்பாக எடிட்டிங், படத்திற்கு எது தேவையோ அதை சரியாக வைத்துள்ளனர். குறிப்பாக ரன்னிங் டைம்.
பாடல்கள் இல்லாதது நல்ல ஆரோக்கியம், முதல் படத்திலேயே ஒரு நேர்மையான முயற்சி அதை ரசிக்கவும் வைத்துள்ளார் இயக்குனர்.

பல்ப்ஸ்

SAW பார்க்காதவர்களுக்கு இது புது அனுபவத்தை தந்தாலும், பார்த்தவர்களுக்கு அத்தனை பரபரப்பு இருக்க வாய்ப்பில்லை.
மேலும், பட்ஜெட் காரணமா என்று தெரியவில்லை சில காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது,
மொத்தத்தில் பலரும் காப்பியடித்து எடுக்க, உண்மையை கூறி முடிந்த அளவு சிறப்பாக எடுத்த சதுரத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

tamilgun news,tamil gun news,tamilgun cinema news, tamil cinema news, tamil cinema gossip,tamil cinema gossip in english,cineulagam,cineulagam in tamil news,new tamil cinema, new tamil cinema free download,Latest Tamil News & Updates,Get the daily and latest cinema News in tamil,123 tamil cinema news, ajithfans, tamil cinema news entertainment websites, tamil cinema news in tamil language, tamil cinema news vijay, dinakaran tamil cinema news
tamil cinema news in english, tamil cinema news in tamil font

Share this:

 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates