போருக்கு செல்லும் மகனிடம் தாய் கண்ணீர் விட்டு பேசும் வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய உரி தாக்குதலில் 19 இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தினர், இதில் ஏராளமான தீவிரவாதிகள் இறந்ததாக இந்திய இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது அண்டை நாட்டுடன் போருக்கு செல்லும் மகனிடம் தாய் ஒருவர் போன் செய்து பேசிய வாட்ஸ் ஆப் ஓடியோ இணையத்தில் உலா வருகிறது.
அதில் தாய் எங்கே இருக்கிறாய் என கேட்க, அதற்கு மகன் நன்றாக இருக்கிறேன் எனவும், போருக்கு சென்றாலும் சென்று விடுவேன் என்றும், அப்போது எதிர்பாரமால் இறந்து விட்டால் தன் உடல் நமது கிராமத்திற்கு வரும் என உருக்கமாக தொடரும் வாட்ஸ் ஆப் ஓடியோ அண்மையில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
போருக்கு செல்லும் மகனிடம் தாய் பேசும் உருக்கமான பேச்சு: வைரலாகும் வாட்ஸ் ஆப் ஓடியோ!
Posted by Tami on 06:01:00 in LOCAL NEWS | Comments : 0