சுவிட்சர்லாந்தில் சிறுமிகள் உள்ளிட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கி வந்த இளைஞருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் மாகாணத்தில் குடியிருந்து வருபவர் 28 வயதான இந்த துருக்கியர். இவர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இளம் பெண்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.
அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் சூரிச் ஏரி அருகே அவர்களை அழைத்து வந்து தனது காம இச்சைகளை தீர்த்துள்ளார்.
குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக இவர் கைதாகும் முன்னர் 13 வயது சிறுமியுடன் தனது காரில் வைத்து உறவு கொண்டதாக விசாரணை அதிகாரிகளுடன் தெரிவித்துள்ளார்.
அதை இவருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பகிர்ந்துகொண்டு ரசித்துள்ளார்.
மட்டுமின்றி குறிப்பிட்ட பெண்களிடம் நிர்வாண புகைப்படங்கள் கேட்டு மிரட்டல் விடுத்தும், நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவர்களை இந்த நபரின் விருப்பப்படி செயல்பட வைத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தின்படி 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட இளம் பெண்களுடன் உறவில் ஏற்பட்டுள்ளார்.
மட்டுமின்றி இவருக்கு பிடித்தமான இளம் பெண்களுடன் பல முறை உறவில் ஏற்பட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் சிறுவர்களையும் இவர் விட்டுவைக்கவில்லை என கூறப்படுகிறது.
சிறுவர்களுடன் உறவு கொண்டதை விசாரணையின் போது மறுக்காத இவர், அவர்களின் விருப்பத்துடனே உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் குறிப்பிட்ட குற்றவாளி இளைஞருக்கு 15 மாதங்களுக்கு மிகாமல் நிபந்தனை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய நீதிமன்றம் குறிப்பிட்ட குற்றவாளிக்கு 24 மாதங்கள் நிபந்தனை சிறையும் 15,000 பிராங்க் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தண்டனை தீர்ப்பு இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.