BREAKING NEWS
Showing posts with label France News. Show all posts
Showing posts with label France News. Show all posts

பிரபல வீராங்கனைக்கு நேர்ந்த விபரீதம்: பேஸ்புக்கில் வெளியான திக் திக் நிமிடங்கள்

பிரான்சில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் Rebeka Masarova மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை குறித்து Rebeka Masarova தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
Rebeka Masarova வெளியிட்டுள்ள பதிவில், கடந்த செப்டம்பர் 26ம் திகதி Clermont Ferrand நடக்கும் போட்டியில் பங்கேற்க அம்மா, சகோதரானுடன் காரில் பயணம் மேற்கொண்டோம்.
சேரும் இடத்திற்கு 100 கி.மீ முன்னால் நாங்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை, அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினோம்.
திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு வெளியே ஓடத் தொடங்கியது. பின்னர், மூன்று நான்கு முறை உருண்டு ஓர் இடத்தில் நின்றது, நடந்தது அனைத்தும் எனக்கு நினைவு இருக்கிறது.
இந்த விபத்து ஒரு படம் போல் இருந்தது, எங்கள் உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நான் எப்போதும் நன்றி தெரிவிப்பேன் என Rebeka Masarova குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மொடல் அழகியுடன் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர்: வைரல் வீடியோ

பிரான்சில் பிரபல மொடல் அழகி நடந்து செல்லும் போது அவரை முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல மொடல் அழகியும், ரியாலிட்டி நட்சத்திரமுமான Kim Kardashian (35) கடந்த செவ்வாய் கிழமை பாரிசில் நடைபெற்ற Balmain show விற்கு வந்துள்ளார்.
கருப்பு நிறை உடை அணிந்து சற்று கவர்ச்சியாக வந்த அவர் காரை விட்டு கிழே இறங்கி தனது பாதுகாவலர்களுடன் பேசன் ஷோ நடக்கும் பகுதியை நோக்கி நடந்து சென்றார்.
அப்போது எதிர் பாராதவிதமாக இருக்கையில் அமர்ந்திருந்த Vitalii Sediuk கிம்மின் பின் பக்கத்தில் முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கிம் அப்பகுதியை விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டார்.
கிம்முடன் வந்த பாதுகாவலர்கள் அவரை உடடியாக பிடித்து கிழே தள்ளி அடித்து கண்டித்து அனுப்பினர்.
இதற்கு மொடல் அழகி கிம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாதுகாவலர்கள் தான் தன்னுடைய கடவுள் அவர்களுக்கு என்னுடைய நன்றி என தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் Vitalii Sediuk இதே பாரிசில் மற்றொரு மொடல் அழகியான Gigi தூக்கி பிடித்து ஆபாசமாக நடக்க முற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழியல் பட்டப்படிப்பில் புலம்பெயர் மாணவர்கள் உலக சாதனை

பிரான்சு தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழத்துடன் சேர்ந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில்
புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர். 2016 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி. பரமேஸ்வரன் சுசானி ,எழுத்துப்
பகுதி மற்றும் இணைய வழி வினாக்கள் என இரண்டு பகுதிக்கும் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றுள்ளார். இதேவேளை 2015 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி தட்சாயணி தங்கதுரை
இணைய வழித் தேர்வில் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து இரண்டு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச்சோலையில் பன்னிரண்டாம் ஆண்டு வரை தமிழ்க் கல்வி கற்ற புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் பட்டப்படிப்பில் நுழைந்து வருகின்றனர். அவர்களாலேயே இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


- Lankasri

விடுதலைப் புலிகளுடன் மஹிந்த கொண்டிருந்த உறவு - எமில்காந்தன் யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்

கடந்த காலங்களில் கொழும்பு அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்களில், விடுதலைப் புலிகள் தரப்பின் வர்த்தக பிரதானியாக செயற்பட்ட எமில்காந்தனும் முக்கியத்துவம் பெறுகிறார்.
விடுதலைப் புலிகளுக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் என பல வழிகளில் செயற்பட்டமையால் எமில்காந்தன் பிரபலமாகி இருந்தார்.
இலங்கை அரசியலை தீர்மானிக்கும் தருணத்தின் போது, கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கப்பட்டார்.
இதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வழங்கியிருந்தார்.
அப்போதைய காலத்தில் சமாதான நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து மஹிந்த களமிறங்கினார்.
எனினும் நடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடபகுதி மக்கள் ஜனாதிபதி தேர்தலை முற்றாக புறக்கணித்திருந்தனர்.
இதன்மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த வெற்றி பெற்றார்.
எனினும் இந்த தேர்தலின் போது பல்வேறு கொடுக்கல் வாங்கல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையில் எமில்காந்தன் நேரடியாக தொடர்பு பட்டவர் என்பதால் ஊடக வாயிலாக அதிகம் பேசப்பட்டவராகும்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அடுத்து விடுதலைப்புலிகளுக்கும், மஹிந்த தரகர்களுக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வும், பணக் கொடுக்கல் வாங்கல்களும் வெளிவரத் தொடங்கின.
தமிழ்ச்செல்வனுக்கும், மகிந்தவின் பிரதிநிதிக்குமிடையே கிளிநொச்சியில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்தமை அறிந்த விடயமே.
தமிழ் மக்களின் பெயரால் பாரிய வீடமைப்புத் திட்டத்திற்கென பெரும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், கருணா தரப்பினரின் ஆயுதங்கள் பறிக்கப்படும் எனவும், புலிகளால் குறிப்பிடப்படும் பிரமுகர்கள் முக்கிய அரசியல் பதவிகளைப் பெற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மஹிந்த அரசினால் விடுதலைப் புலிகளுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதன்படி தேர்தல் முடிந்து மூன்று மாதங்களில் ராஜபக்ஸ அரசு வட பகுதி வீடமைப்புத் திட்டத்திற்கென பல மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவை தீர்மானிக்கப்பட்டன. இதன்படி குறித்த பணத்தை புலிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கூற்றையும் அரசு ஏற்றுக்கொண்டது.
இவை இவ்வாறிருக்க, இதற்கு முன்னரே புலிகளின் முக்கிய பிரதிநிதியாக அவர்களது உளவுப் பிரிவில் செயற்பட்ட வர்த்தகரான எமில்காந்தனால் வழங்கப்பட்ட பொய்யான வங்கிக் கணக்கிற்கு 150 மில்லியன் வழங்கப்பட்ட விடயம் பின்னர் நடாத்திய விசாரணைகளின் போதே தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த ஊழல் நடவடிக்கைகளை சட்ட ரீதியானதாக மாற்றும் வகையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட “பி ரொம்” என அழைக்கப்படும் சுனாமி அனர்த்த நிவாரண பொறிமுறைக்கு பதிலாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் அமைப்பு ஒனறு உருவாக்கப்பட்டு அந்த புதிய அமைப்பிற்கு டிரான் அலஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனால், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரான் அலஸ் வீட்டிற்கு கைக்குண்டு வீசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்..
“எமில் காந்தனிடம் 180 மில்லியன் ரூபாய் பணத்தை பஸில் ராஜபக்ஸவே வழங்கினார்” என டிரான் அலஸ் குற்றம் சாட்டினார். ஆனால் இன்றுவரை அதற்கான விசாரணைகள் நடத்தப்படவில்லை.
இந்தச் செய்தியால் பல விமர்சனங்கள் எழுந்ததுடன், பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ புலிகளுடன் தாம் உறவு வைத்திருக்கவில்லை என பாராளுமன்றத்தில் மறுத்திருந்தார்.
எமில்காந்தனுக்கு சொந்தமான வங்கிக்கணக்கிற்கு ஏன் பணம் சென்றது?, பஸில் ஏன் குறித்த பணத்தை எமில் காந்தனுக்கு வழங்க வேண்டும்?, தற்போது எமில்காந்தன் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இந்த நல்லாட்சியிலாவது தொடருமா? என்பது மக்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதேவேளை கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில், 200 மில்லியன் ரூபா பணத்தை தானும் பஷில் ராஜபக்ஷவும் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளிடம் கையளித்ததாக காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி கடந்த 2007ஆம் ஆண்டு நாடாளுமன்றில் முதன் முதலாக இந்த தகவலை வெளியிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மனைவியை கொலைசெய்து விட்டு உடலை எரித்த கணவன் - 17 வருடங்களின் பின் மரண தண்டனை

Topics :
#Kandapola#Judgingநு

வரெலியா - கந்தபொல பிரதேசத்தில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீதுருதாலகால மலையைச் சேர்ந்த, இந்திகருவான் குமார என்பவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி குமுது பிரேமச்சந்திர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 1998ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒரு வருடங்களின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சரியான தீர்ப்பை எட்டியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
1998ஆம் ஆண்டு கந்தபொல - பீதுருதாலகால மலைப்பகுதியில் தனது மனைவி அனுசா காயத்திரியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை எரித்து விட்டு, தனது மனைவி காணாமல் போனதைப் போன்று நாடகமாடியுள்ளார்.
கொலை சம்பவம் இடம்பெற்று சுமார் ஐந்து மாதங்களின் பின்னரே குறித்த இடத்தில் சடலம் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 1999ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவம் நடைபெறும் பொழுது இந்திகருவான் குமாரவிற்கு 19 வயது எனவும் தற்போது 36 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதியில், தனது மனைவியான அனுசா காயத்திரியை கொலை செய்த குற்றத்திற்காக இந்திகருவான் குமாரவிற்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி குமுது பிரேமச்சந்திர மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
-TamilWin
 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates