BREAKING NEWS
Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

டுபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்

Topics : #FlightCrash #Dubaiairport #closed #unauthoriseddrone


உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன் மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது.இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260 முக்கிய பெரு நகரங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 8 மணியளவில் துபாய் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வான் எல்லையில் ஆளில்லா மர்ம விமானம் ஒன்று சுற்றிச்சுற்றி வட்டமிட்டு பறந்து வந்தது. இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து, டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது. பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. டுபாய் நாட்டில் விமான நிலையங்களுக்குட்பட்ட சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் தனியாருக்கு சொந்தமான ஆளில்லா விமானங்களை பறக்க விடக்கூடாது. லேசர் ஒளியை பாய்ச்சுவது, கமராக்களால் படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்நாட்டின் அரசு ஏற்கனவே கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், அத்துமீறலாக சில வேளைகளில் இதுபோல் சில ஆளில்லா மர்ம விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்களும் இங்கு நிகழந்தவாறுள்ளன. கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி இதேபோல் பறந்த ஒரு ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் டுபாய் சர்வதேச விமான நிலையம் சுமார் 70 நிமிடங்கள் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - Maalai Malar

இது என்ன மாத்திரை? சிவக்குமார் எங்கே?' - ஆவேச முதல்வர்... பதற்றத்தில் அப்போலோ

Topics :
#Jayalalithaa #Jayalalithaangry

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துவிட்டன.'நியூயார்க் மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை நடந்து வந்தாலும், முதல்வர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்' என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.
சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.' கடந்த 20 ஆண்டுகளில் சிகிச்சைக்காக இவ்வளவு நாட்கள் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை' என்பது கார்டன் கவலை.
நேற்று மாலை முதல்வரின் உடல்நலம் குறித்து சில தகவல்கள் பரவியதும், உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து அறிக்கை வெளியிடச் சொன்னார் சசிகலா.
இதனையடுத்து, 'முதல்வரின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தது காவல்துறையின் அறிவிப்பு.
இந்நிலையில், 'இப்போது எப்படி இருக்கிறார் முதல்வர்?' என்ற கேள்வியை மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம்.நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர், " முதல்வர் உடல்நலன் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.திரவ உணவுகளை எடுத்துக் கொள்கிறார். நேரத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்கிறார். மருத்துவமனையிலேயே அவருக்கென பிரத்யேகமான திரவ உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
நேற்று மாலை செய்தித்தாள்களை வாங்கிப் படித்தார். சசிகலாவும் இளவரசியும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்கள்.
'சீக்கிரமே வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர். அதன் வெளிப்பாடாக மருத்துவமனை ஊழியர்களிடம் கோபத்தைக் காட்டுகிறார்.
அவரைக் கவனித்துக் கொள்ள ஷிப்ட்டுக்கு மூன்று நர்சுகள் வீதம் பணியில் இருக்கின்றனர்.
நேற்று அவருக்கு மாத்திரைகளைக் கொடுப்பதற்காகச் சென்ற நர்ஸிடம், ' இது என்ன மாத்திரை? சிவக்குமார் எங்கே? (முதல்வரின் பிரத்யேக மருத்துவர்) அவரை வரச் சொல்லுங்கள்' எனக் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.
இதனால் அவர் அருகில் செல்லவே நர்சுகள் பயப்படுகின்றனர்.
நேற்று மாலை முதல்வரின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் வெளியானதும், முதல்வரை கவனித்துக் கொள்ளும் நர்சுகள் முதல் இரண்டாம் தளத்தின் பொறுப்பாளர்கள் வரையில், அனைவரது செல்போன் எண்களையும் வாங்கிக் கொண்டார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
' ஊழியர்கள் வேறு எதாவது எண்களைப் பயன்படுத்துகிறார்களா' என விசாரித்தார். இதன்பின்னர் எங்களிடம், ' உங்கள் அனைவரது போனும் ட்ரேஸ் செய்யப்படுகிறது.
இங்கிருந்து எந்த ஒரு தகவல் சென்றாலும் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என எச்சரித்துவிட்டுச் சென்றார். இதனால் ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்வருக்கு நியூயார்க்கைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, சர்வதேச மருத்துவக் குழு ஒன்று, அப்போலோ மருத்துவமனையோடு நேரடி தொடர்பில் இருக்கிறது. முன்பைவிட வேகமாக குணமடைந்து வருகிறார் முதல்வர்.
எனவே, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம். காவல்துறை கெடுபிடிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்" என ஆதங்கப்பட்டார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதற்கொண்டு அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளும் அரசு ஆலோசகர்களும் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்புகின்றனர்.
இந்த சந்திப்பு குறித்து ஏதேனும் ஒரு படத்தை வெளியிட்டாலே தேவையற்ற வதந்திகள் உலவுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குமுறலை வெளிப்படுத்துகின்றனர் அதிகாரிகள்.
- Vikatan





தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடியில் இறங்கிய அரசியல் கட்சியினர்!

ஜோர்ஜியா நாட்டில் தொலைக்காட்சி நேரலை விவாதத்தின்போது அரசியல் கட்சி தலைவர்கள் இருவர் அடிதடியில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்ஜியா நாட்டில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என அங்குள்ள அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

ஆங்காங்கே காரசாரமான விவாதங்களும் கைகலப்புகலும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சி விவாதத்தின் நேரலையின்போது சீர்திருத்தவாதிகள் கட்சியை சேர்ந்த இராக்லி கிளோந்தி மற்றும் தொழில்துறை கட்சியை சேர்ந்த சாஸா அக்லாட் ஆலிய இரண்டு ஜோர்ஜியா அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் ஆவேசமாக தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.


ஒரு கட்டத்தில் இருவரது வார்த்தைகளும் கோபத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி கைகலப்பிலும் இறங்கியுள்ளனர்.


விவாதத்தை நடத்திய நடுவர் பல முறை இவார்கள் இருவரையும் கண்டித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இதனிடையே திடீரென்று ஒருவர் தனக்கு முன்பிருந்த தண்ணீரை எடுத்து இன்னொருவரின் முகத்தில் வீசினார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கோபத்தில் இருக்கையை விட்டு எழுந்து வந்து தாக்கினார்.
இந்த சம்பவம் நேரலையில் சில நிமிடங்கள் வரை நீடித்தது.

பெண்களை கவர நினைக்கும் ஆண்கள் இதையெல்லாம் செய்யாதீங்க!

உலகில் ஒவ்வொரு ஆணும் பெண்களையும், ஒவ்வொரு பெண்ணும் ஆண்களையும் கவர நினைப்பது சாதாரண ஒன்று தான்.

ஆனால், ஆண்கள் பெண்களை கவர நினைப்பதாக தங்களுக்கு சிறிதளவும் பொருத்தமற்ற சில உடைகள் அல்லது ஆபரணங்களை அணிந்து, அவர்களது அழகை கெடுத்துக் கொள்கின்றனர்.

பேஷன் என்று சிலவற்றை அணிந்தாலும், அது பெண்களுக்கு மோசமான அபிப்ராயத்தை தான் ஏற்படுத்தும்.

காதலி அல்லது தான் விரும்பும் பெண்ணை ஈர்க்க நினைக்கும் ஆண்கள் அணியக் கூடாத சில,

டீப் V-நெக் டி-சர்ட்

உங்கள் காதலியையோ அல்லது விரும்பும் பெண்னையோ பார்க்க செல்லும் போது இந்த டீ-சர்ட் மிகவும் அழகாக இருக்கிறது என்று நீங்களாவே நினைத்துக் கொண்டு அணிய நினைக்காதீர்கள். அப்படி அணிந்தால், எந்த ஒரு பெண்ணும் உங்கள் அருகில் கூட வரமாட்டார்கள்.

சங்கிலி

சில ஆண்கள் கெத்து என்று நினைத்துக் கொண்டு, கண்ட சங்கிலியை அணிந்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களுக்கு இம்மாதிரி சங்கிலியுடன் சுற்றும் ஆண்களைக் கண்டால் பயம் வருமே தவிர, ரொமான்ஸ் வராது.

லெதர் பேண்ட்

மின்னும் லெதர் பேண்ட் பெண்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, ஆண்களுக்கு இது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இம்மாதிரியான பேண்ட்டுகளை அணிவது என்ன வாங்க கூட நினைக்காதீர்கள்.

இறுக்கமான ஷார்ட்ஸ்

நீங்கள் காலையில் ஜாக்கிங் செல்பவராக இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம். ஆனால் அப்போது இறுக்கமான ஷார்ட்ஸ்களை அணிந்து சென்றால், பெண்கள் விலகித் தான் செல்வார்களே தவிர, உங்களை பார்க்கக்கூட மாட்டார்கள்.

காலணி

படத்தில் காட்டப்படும் காலணி நன்றாக இருக்குமே தவிர, ஆண்கள் இதை அணிந்தால் அது மோசமான தோற்றத்தை தான் கொடுக்கும். வேண்டுமானால் ஆண்கள் இம்மாதிரியான காலணியைத் தவிர்த்து, கேஷுவல் ஸ்னீக்கர்ஸ் அணியலாம்.

Cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment
 

தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது: பிரபல நடிகை ஆவேசம்

கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தரமுடியும் என பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு, தினமும் வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கர்நாடகாவின் சில பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்பியான ரம்யா கூறுகையில், தமிழகத்திற்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்காகத் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்கப்படுகிறது.
ஆனால் கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும். இதன் காரணமாக தமிழத்திற்கு தண்ணீர் தரமுடியாது என கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றமோ தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவு பிறபித்துள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது என கூற மறுக்கின்றனர். அது மட்டுமில்லாமல் பாதிப்பு காலங்களில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 75 டிஎம்சி அளவு தண்ணீர் தந்தால் போதும் என 1987-88 ஆம் ஆண்டுகளில் எம்.எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
75டிஎம்சி அளவு தண்ணீர் தமிழகத்திற்கு தந்து விட்டோம். தற்போது அதை விட கூடுதலாக தண்ணீர் கேட்பது நியாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இரு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை(வயது 50) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அண்ணாமலைக்கு நேற்று இரவு 7 மணிக்கு திடீர் என்று நெஞ்சு வலி, மயக்கம் ஏற்பட்டதால் கீழ்பாக்கத்தில் உள்ள கே.எம்.சி.’யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம், சகுனி, படங்களில் பனாரஸ் பட்டுகட்டி, என் உச்சி மண்டையில சுர்ருங்குது, மஞ்சனத்தி நாட்டுக்கட்ட மைய வச்சி மயக்கிபுட்ட, போட்டது பத்தல மாப்ள என்று நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.
ஹரிதாஸ் படத்தில் இவர் எழுதிய, அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே என்று பாடல் இவருக்கு நல்ல பெயரை தந்தது. நிறைய பக்திப்பாடல்களையும் எழுதியுள்ளார். காப்பிராயன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.

பாலியல் தொழிலாளிக்கு பிறந்த பெண்: பெற்றோருக்கு விடுத்த உருக்கமான கோரிக்கை



Humansofbombay- Facebook

பாலியல் தொழிலாளிக்கு பிறந்து தற்போது மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் இந்திய நாட்டு பெற்றோர்களுக்கு ஒரு உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
இளம்பெண் ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள ஒரு தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இளம்பெண் வெளியிட்ட தகவலின் தமிழாக்கம் இதோ...!!
‘மும்பையில் பாலியல் தொழில் நடைபெறும் சிவப்பு விளக்கு பகுதியான Kamathipura நகரில் தான் நான் பிறந்தேன். என்னுடைய தாய் கேரளாவில் இருந்து கடத்தப்பட்டு இங்கு மும்பையில் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுப்படுத்தப்பட்டார்.
ஆனால், மும்பையில் எனது தந்தையை சந்தித்தபோது அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாக தனது பாலியல் தொழிலை நிறுத்திவிட்டு வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார்.
எங்களுக்கு சிறிது வருமானம் வந்தாலும் கூட, இந்த காமதிபுரா நகரை விட்டு வெளியேற முடியவில்லை.
நான் வளர்ந்தபோது இச்சமுதாயத்தில் பல்வேறு அவமானங்களையும் பாகுபாடுகளையும் சந்தித்தேன்.
சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து வரும் கருப்பான சிறுமியான என்னை அனைவரும் கேலி செய்தனர்.
மும்பை பள்ளியில் படித்தபோது என்னுடன் யாரும் பேச மாட்டார்கள். என்னுடன் விளையாடவும் வர மாட்டார்கள். நான் நடந்து போகும்போது ‘ஏய், அங்க பாருங்க ஒரு கருப்பு காக்கா நடந்து போகுது’ என சக மாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இவை அனைத்தையும் சகித்துக்கொண்டேன்.

என்னுடைய 10 வயது வரை என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறியாதவளாக இருந்தேன். என்னுடைய நிலையை ஒரு ஆசிரியர் தவறாக பயன்படுத்திக்கொண்டார். ஆம், கற்பழிப்பு என்றால் என்ன என்பது கூட தெரியாத அந்த வயதில் ஆசிரியர் என்னை கற்பழித்து விட்டார்.
ஒருவர் நமது உடலில் எங்கு தொட்டால் சரியானது, எங்கு தொட்டால் தவறானது என்ற அடிப்படை அறிவை கூட நமது கல்வி நமக்கு கற்றுத்தரவில்லை.
நான் கற்பழிக்கப்பட்டேன் என்பது கூட எனக்கு 16 வயது ஆகும்போது தான் புரிந்தது.
இப்போது என்னுடைய ஒரு குறிக்கோள் வீதி வீதியாக நாடகங்கள் நடத்தி அதன் மூலம் பிள்ளைகளுக்கு என்ன கற்றுத்தர வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது தான்.
உடலுறவு என்றால் என்ன? ஒரு ஆண்மகன் எப்படி நம்மிடம் நடந்துக்கொள்ள வேண்டும்? நம்மை தொடுபவர்கள் எந்த எண்ணத்தில் தொடுகிறார்கள்? என்ற அடிப்படை விழிப்புணர்வை இப்போது ஏற்படுத்தி வருகிறேன்.
ஆனால், இதுபோன்ற தகவல்களை பிள்ளைகளுக்கு கூறுவது தவறு என இன்றைய பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
நம்முடையை பிள்ளைகள் மற்றவர்களால் கற்பழிக்கப்படுவதை விட இதுபோன்ற தகவல்களை அவர்களுக்கு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் சிறந்தது.
அதே சமயம், அழகு என்பது நிறத்தில் இல்லை என்பதையும் நமது பிள்ளைகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். நீங்கள் சிவப்பாக அல்லது கருப்பாகவும் இருந்தாலும் கூட நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
அழகு ஒருபோது தோலின் நிறத்துடன் தொடர்புடையது அல்ல. இதனை அவசியம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்’. என பெயர் வெளியிடாத அந்த இளம்பெண் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates