BREAKING NEWS
Showing posts with label Swiss Tamil News. Show all posts
Showing posts with label Swiss Tamil News. Show all posts

சுவிசில் மசூதியின் உள்ளே கைது செய்யப்பட்ட இருவர்: காரணம் என்ன?

சுவிற்சர்லாந்தின் பேசல் நகரில் புகழ்பெற்ற King Faisal மசூதி உள்ளது. அந்த மசூதிக்கு வந்த இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆன்டிரீஸ் நூச்சல் என்னும் பொலிஸ் ஆய்வாளர் கூறுகையில், இரண்டு மர்ம நபர்கள் சுவிற்சர்லாந்தில் அனுமதி இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க நாங்கள் திட்டம் வகுத்தோம், அதன் படி அங்குள்ள மக்கள் யாருக்கும் தொந்தரவு தராத படி அந்த இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தோம் என அவர் கூறியுள்ளார்.
அந்த மசூதி சர்ச்சைக்கு பெயர் போனதாகும். ஏற்கனவே அங்கு இமாம் ஆக இருப்பவர் தன் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் வேறு மதத்தவர் என்பதால் அவருடன் கை குலுக்க மறுத்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

சுவிட்சர்லாந்தில் சிறுமிகள் உள்ளிட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கி வந்த இளைஞருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் மாகாணத்தில் குடியிருந்து வருபவர் 28 வயதான இந்த துருக்கியர். இவர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இளம் பெண்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.
அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் சூரிச் ஏரி அருகே அவர்களை அழைத்து வந்து தனது காம இச்சைகளை தீர்த்துள்ளார்.
குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக இவர் கைதாகும் முன்னர் 13 வயது சிறுமியுடன் தனது காரில் வைத்து உறவு கொண்டதாக விசாரணை அதிகாரிகளுடன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இவர் ரகசிய கமெராவை பயன்படுத்தி தாம் அழைத்து வரும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை பதிவு செய்து வந்துள்ளார்.
அதை இவருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பகிர்ந்துகொண்டு ரசித்துள்ளார்.
மட்டுமின்றி குறிப்பிட்ட பெண்களிடம் நிர்வாண புகைப்படங்கள் கேட்டு மிரட்டல் விடுத்தும், நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவர்களை இந்த நபரின் விருப்பப்படி செயல்பட வைத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தின்படி 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட இளம் பெண்களுடன் உறவில் ஏற்பட்டுள்ளார்.
மட்டுமின்றி இவருக்கு பிடித்தமான இளம் பெண்களுடன் பல முறை உறவில் ஏற்பட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் சிறுவர்களையும் இவர் விட்டுவைக்கவில்லை என கூறப்படுகிறது.
சிறுவர்களுடன் உறவு கொண்டதை விசாரணையின் போது மறுக்காத இவர், அவர்களின் விருப்பத்துடனே உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் குறிப்பிட்ட குற்றவாளி இளைஞருக்கு 15 மாதங்களுக்கு மிகாமல் நிபந்தனை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய நீதிமன்றம் குறிப்பிட்ட குற்றவாளிக்கு 24 மாதங்கள் நிபந்தனை சிறையும் 15,000 பிராங்க் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தண்டனை தீர்ப்பு இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மின்கம்பியில் சிக்கிய ராணுவ ஹெலிகொப்டர்: பரிதாபமாக பலியான விமானிகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மின்கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள Gotthard என்ற பகுதியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் வேளையில் ராணுவ முகாம்களை பரிசோதனை செய்வதற்காக 4 பிரான்ஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ராணுவ ஹெலிகொப்டர் Gotthard பகுதிக்கு வந்துள்ளது.
ஹெலிகொப்டர் தரையிறங்கியதும் அதிலிருந்து 4 அதிகாரிகள் கீழே இறங்கிய பின்னர் ஹெலிகொபர் மீண்டும் பறக்க தொடங்கியுள்ளது.
அப்போது, ஹெலிகொப்டரில் இரண்டு விமானிகள் பயணம் செய்துள்ளனர்.
ஹெலிகொப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 2,000 மீற்றர் உயரத்தில் பறந்தபோது அந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
பயணிக்கும் வழியில் இருந்த மின்கம்பியில் ஹெலிகொப்டர் திடீரென சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இறக்கை உடனைந்த அந்த ஹெலிகொப்டர் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தை கண்ட சிலர் விரைந்து சென்று தீயை அணைக்க போராடியுள்ளனர்.
பின்னர், உள்ளே இருந்த விமானிகளை மீட்டபோது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மின்கம்பியில் சிக்கி ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலக நாடுகளை பின்னால் தள்ளிய சுவிஸ்: எதில் தெரியுமா?

சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முன்னிலை வகித்து வரும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக பொருளாதார மையம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போட்டித்திறன் குறியீடு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு, பேரியல் பொருளாதார சூழ்நிலை, சுகாதாரம், ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி மற்றும் பயிற்சி, சரக்கு சந்தை திறன், நிதிச் சந்தை வளர்ச்சி, சந்தை மதிப்பு மற்றும் கண்டுபிடிப்பு உள்ளிட்ட 12 காரணிகளை மையப்படுத்தி இவற்றில் எந்த நாடு சிறைந்ததாக விளங்குகிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
2016-2017ம் ஆண்டுக்குரிய ஆய்வை 138 நாடுகளில் மேற்கொண்டு அதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளது.
சர்வதேச போட்டித்திறன் குறியீடு அறிக்கையில் முதல் 10 இடங்களை பிடித்து நாடுகளின் பட்டியல்:
  1. சுவிட்சர்லாந்து
  2. சிங்கப்பூர்
  3. அமெரிக்கா
  4. நெதர்லாந்து
  5. ஜேர்மனி
  6. சுவீடன்
  7. பிரித்தானியா
  8. ஜப்பான்
  9. ஹோங்கோங்
  10. பின்லாந்து
இதே பட்டியலில் கனடா - 15, பிரான்ஸ் - 21, அவுஸ்ரேலியா - 22, இந்தியா - 39, இலங்கை - 71 ஆகிய இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2014 TamilGun News. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates